தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த பகுதிக்குள் புகுந்து அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தேரர்..! 3 அதிகாரிகள் வைத்தியசாலையில், சட்டம் இதுக்கெல்லம் பாயாதா..?

ஆசிரியர் - Editor I
தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த பகுதிக்குள் புகுந்து அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தேரர்..! 3 அதிகாரிகள் வைத்தியசாலையில், சட்டம் இதுக்கெல்லம் பாயாதா..?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த சம்ப்வம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரே இவ்வாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி சிறைப்பிடித்துள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடி பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு 

அழைத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்துள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சம்பவ இடத்திற்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் பொலிஸார் உடன் வரவேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் பொலிஸார் வந்து பிக்குவுடன் சமாதானம் பேசி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.பிக்குவால் தாக்கப்பட்ட மூன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் 

கரடியணாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.32 வயதுடைய பொன்னம்பலம் மதன், 36 வயதுடைய தர்மராஜா ஜெசிதரன், 

அம்பாறை தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த 36 வயதுடைய லால் ஹேமந்த ஜெயலத் உள்ளிட்ட மூன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே இவ்வாறு தேரரால் தாக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு