வடகிழக்கின் வேதனை! வடகொரியாவில் சாதனை..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கின் வேதனை! வடகொரியாவில் சாதனை..

வடகொரியாவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்தில் 2000 வீடுகளைக் கட்டிக்கொடுத்து சாதனை படைத்துள்ளனர் அந்நாட்டு படையினர். 

வடகொரியாவில் இந்த மாதத்தின் (செப்ரெம்பர்) முதல் வாரத்தில் வீசிய கடும் புயல்காற்று மற்றும் மழை  காரணமாக நாத் வாங்கி என்ற மாகாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்தன. 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 9 ஆம் திகதி வடகொரிய அதிபர் கிம் யாங் உன் நேரடியாக சென்று பார்வையிடார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்து கொடுக்குமாறு படையினருக்கு உத்தரவிட்டார். 

படையினர் இரவு பகலாக மின்னல் வேகத்தில் செயற்பட்டு ஒரே வாரத்தில் இரண்டாயிரம் (2000) வீடுகளைக் கட்டி முடித்தனர். இது மக்களிடம் வழங்கப்படவுள்ளது. படையினரின் விரைவான  செயற்பாட்டை வடகொரிய அதிபர் பாராட்டியுள்ளார். 

வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்திருந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.  பாதிக்கப்பட்ட  பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போதும்  வீடுகள் இன்றி தவிக்கின்றனர். ஆனால், அரசாங்கமோ தாம் மீள்குடியேற்ற செயற்பாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டனர் என தம்பட்டம் அடிக்கின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி பொன்ராசா..

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு