யாழ்.செம்மணியில் நரிகள் நடமாட்டத்தை நோில் ஆய்வு செய்த வனஜீவராசிகள் திணைக்களம்..! துரித நடவடிக்கைக்கு தீர்மானம்..
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நரிகளின் நடமாட்டம் காணப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் செம்மணிப் பகுதியில் நேரில் ஆய்வில் ஈடுபட்டனர்.
செம்மணி நல்லூர் வீதியில் அருகருகே 3 மயானங்கள் காணப்படும் பகுதியை அண்டிய பகுதியில் கடந்த 3 தினங்களிற்கு முன்பு நரியின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அவ்வாறு வெளிவந்த செய்தி கிளிநொச்சியில் உள்ள
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட விடயத்தின் உண்மை நிலமை அப் பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அல்லது வாழ்விடத்திற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பன தொடர்பிலும்
அப் பிரதேசங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது செம்மணிப் பகுதியில் உள்ள பழைய மாந்தை மேற்கு உப்பளம் இருந்த பகுதியில் காடப்படும் பரட்டைக் காடுகளில் நரி அல்லது ஓநாய்கள் வாழக்கூடிய ஏதுநிலை காலப்படுவதனை அவதானித்தனர்.
குறிப்பாக இதற்கு அண்மையில் 3 மயானங்கள் இருக்கும் அதே நேரம் இதனை அண்டிய சிறு பற்றைகளில் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதன் எச்சங்கள் அதிகளவில் கொட்டப்பட்டுக்காணப்படுகின்றது.
இந்த கால்நடை எச்சங்களை உணவாக கொண்டு அவை வாழ்ந்திருக்க கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் இப் பகுதியில் நரிகளின் நடமாட்டத்தை அழிக்க அல்லது இப்பகுதியில் வாழ்வதனையோ அதிகரிப்பதனையோ தடுப்பதற்கு
அப் பகுதியில் காணப்படும் பற்றைகள் குப்பைகளை அகற்றி ஓர் பாவனை இடமாக மாற்றுவதன் மூலமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.