மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த உப அதிபர் கைது..! விடயத்தை மூடி மறைக்க 1 லட்சம் லஞ்சம் வழங்க முயற்சித்த உப அதிபரின் மனைவி..
பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த உப அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தை மறைக்க மாணவனுக்கு உப அதிபரின் மனைவி 1 லட்சம் ரூபாய் வழங்க முயற்சித்த சம்பவமும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றும் மாணவனை உப அதிபர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறையிடப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக பாணந்துறை பொலிஸார் உப அதிபரை கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த சம்பவத்தை மறைப்பதற்காக உப அதிபரின் மனைவி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்க முயற்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது.