குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு. இறுதி சடங்கிற்கு வசதியற்று நிற்கும் குடும்பம்..

ஆசிரியர் - Editor I
குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு. இறுதி சடங்கிற்கு வசதியற்று நிற்கும் குடும்பம்..

சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக குளத்தில் விழுந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வாகரை குகனேசபுரம் ஆலம்குளத்தினை சேர்ந்த ச.விஜயரூபினி (12) எனும் ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது சகோதரியுடன் அருகில் உள்ள குளக் கட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி குளத்தில் உள்ள மடுவில் வீழ்ந்துள்ளார். பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துசென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவிணர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் பிரதேசத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியின் தாயார் கணவினால் கைவிடப்பட்ட நிலையில் தமது 3 பெண் பிள்ளைகளையும் ஆடு மேய்க்கும் கூலித் தொழில் ஈடுபட்டு தமது வாழ்வாதரத்தினை மேற்கொண்டு வருகிறார். தற்போது சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்வதில் 

பொருளாதார சிக்கல் நிலையினை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு