ராக்கை தாக்கிய கொரோனா!!

ஆசிரியர் - Editor III
ராக்கை தாக்கிய கொரோனா!!

பிரபல ஹாலிவுட் நடிகரும் மல்யுத்த வீரருமான ராக் என்கிற டிவைன் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.

பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த நடித்தவர் நடிகர் டிவைன் ஜான்சன். இவர் பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற மல்யுத்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை பெரும்பாலானோர் ராக் என்றே அழைப்பார்கள்.

இந்த நிலையில் நடிகர் டிவைன் ஜான்சன் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்றும், தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ‘நோய் எதிர்ப்பு சக்தியை அனைவரும் அதிகரித்து கொள்ளுங்கள். கண்டிப்பாக மாஸ் அணியுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாப்புடன் பார்த்து கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்திற்கு இதுவொரு சோதனையான காலம். இருப்பினும் இதிலிருந்து மீண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Radio