கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor III
கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா!!

பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதகைள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும்  தப்பவில்லை. அந்த வகையில், கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு