யாழ்.மானிப்பாய் பிரதேசபையில் 4 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு..! தவிசாளர் மௌனம், செயலாளர் பம்மல். களேபரப்படுத்திய உறுப்பினர்கள்..

ஆசிரியர் - Editor I

மானிப்பாய் பிரதேசசபையின் தலமை அலுவலகத்தில் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றது. 

குறித்த களவு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதுடன், களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பாகவும் அவற்றின் பெறுமதி தொடர்பாகவும் பகிரங்கப்படுத்துமாறு உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். 

உறுப்பினர்களின் இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கப்படாததுடன், நடவடிக்கையும் எடுக்க தவறியதால் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 

இதனால் சபை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. மானிப்பாய் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மூன்று மாதத்திற்கு முன்னர்  

பொருட்களுக்கு பொறுப்பானவர் இல்லாத நிலையில் பிரதேச சபையின் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அன்றைய தினம் கண்காணிப்புக் கமெராவில் இருந்த அத்தனை பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்காணிப்புக் கமெராவுக்குரிய பதிவேற்றும் கருவிகள் 

செயலாளரின் கண்காணிப்பின் கீழ்தான் இருந்துள்ளது. இத்தகைய நிலையில் குறித்த விடையம் தொடர்பில் எத்தகைய பொருட்கள் எந்த நேரத்தில் யாரால் களவாடப்பட்டுள்ளது? 

என்பது  தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அதன் விபரங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் சபை செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் சபைக்கூட்டங்கள் மூன்று இடம்பெற்றுள்ள நிலையிலும் செயலாளரினாலோ நிர்வாகத்தினராலோ விசாரணையோ அறிக்கையே சமர்ப்பிக்கப்படவில்லை. 

இவற்றை வெளிப்படுத்தாத நிலையில் நேற்று காலை மாதாந்த சபை அமர்வு இடம்பெற்றபோது உறுப்பினர்களினால் குறித்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது 

உரிய பதில் கிடைக்காமையினால் அனைத்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்த தவிசாளர் சபையை கால வரையறையின்றி ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தவிசாளர் ஜெபநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முன் மாதிரியான சபையாக எமது சபையை முன்கொண்டுவருகின்றபோது

 களவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் செயலாளர் மற்றும் நிர்வாகத்தினர் பொறுப்புக்கூறவேண்டும். நாங்கள் பல தடவை இது தொடர்பில் கேட்டபோது 

உரிய பதில்களோ விசாரணைகளோ நடத்தப்படாதுள்ளது.பொறுப்புக்கூறவேண்டியஅரச அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவது ஏன் என்பதே எம்முன்னுள்ள கேள்வியாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு