SuperTopAds

கட்டுப்பாடற்ற வேகம் வீதியைவிட்டு விலகி மோட்டார் சைக்கிள் விபத்து..! 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் வீதியைவிட்டு விலகி மோட்டார் சைக்கிள் விபத்து..! 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

மட்டக்களப்பு - வாகனோி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர். 

வாகனோியைச் சேர்ந்த நா.ததுஷன் வயது (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர், வாகனோி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் 

தமது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டினை மீறி பாதையை விட்டு விலகியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.