திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு: - காருடன் தண்ணீருக்குள் மூழ்கிய காதல் ஜோடி

ஆசிரியர் - Admin
திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு: - காருடன் தண்ணீருக்குள் மூழ்கிய காதல் ஜோடி

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கால்வாயில் காருடன் தண்ணீருக்குள் மூழ்கிய காதல் ஜோடி மீட்கப்பட்டுள்ளனர். உடுமலை அடுத்த சின்னப்பாப்பனூத்து பிரிவு கால்வாயில் கார் ஒன்று கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.விரைந்து சென்ற அதிகாரிகள் காரை மீட்டபோதுதான், உள்ளே ஆண்- பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை நடத்தியதில் உடுமலையை சேர்ந்த அருண்சங்கர் என்பதும், போடிப்பட்டியை சேர்ந்த மஞ்சுளா என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி கூறுகையில், தனியாக தொழில் நடத்தி வந்த அருண்சங்கரும், பள்ளியில் ஆசிரியராக இருந்த மஞ்சுளாவும் காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் சம்மதித்தாலும், மஞ்சுளா ஏழ்மையான குடும்பம் என்பதால் அருண்சங்கர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருவரும் கடந்த 20ம் திகதி மாயமான நிலையில், தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.