பாடசாலைகள் மூடப்பட்ட காலத்தில் சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கபடுமா..? வடக்கு கல்வி அதிகாரிகள் பம்மல்..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் மூடப்பட்ட காலத்தில் சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கபடுமா..? வடக்கு கல்வி அதிகாரிகள் பம்மல்..

கொரோனா இடர்காலத்தில் பாடசாலைகள் பூட்டப்பட்டதால் அக்காலத்தில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்திற்காக வழங்கப்பட்ட பொருட்களை மாணவர்களுக்கே பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பிற மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாணத்தில் அது மேற்கொள்ளப்படவில்லை.

பாடசாலை நாட்களில் ஆரம்ப பிரிவு மாணவர்களிற்கு சத்துணவுத் திட்டத்தில் தேர்வான பாடசாலைகளின் மாணவர்களிற்கு சமைத்த உணவு விநியோகம் இடம்பெறுவது வழமையாகும். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 13ம் திகதி முதல் சகல பாடசாலைகளும் மூடப்பட்டதோடு 

யூலை மாதம் ஆரம்பித்தபோதும் இன்றுவரை முழுமை பெறாத தன்மையே காணப்படுகின்றது. இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் அதிகாரிகள் இது தொடர்பில் சுட்டிக்காட்டியதனையடுத்து மாணவர்களின் உணவுப் பொருளை மாணவர்களிடமே வழங்கும் திட்டம் 

முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது. இதற்கமைய வழங்கப்படும் பொருட்களை விநியோகிக்கும் பொறுப்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் வரும் பாடசாலைகளிற்கான பொருட்களை தேசிய கூட்டுறவுச் சபை ஏற்றிருந்தபோதும் 

அவை இன்றுவரை விநியோகத்தை மேற்கொள்ளவே இல்லை. இலங்கையில் 8ற்கும் மேற்பட்ட மாவட்டத்தில் யூன் , யூலை மாதங்களில் விநியோகம் இடம்பெற்ற பொருட்கள் எமது மாகாணத்திற்கு மட்டும் ஏன் விநியோகிக்கப்படவில்லை என அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது 

செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பி உள்ளோம் எனப் பதிலளிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு