SuperTopAds

இருமினால் ரெட் கார்டு!! -கால்பந்து சங்கம் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor III
இருமினால் ரெட் கார்டு!! -கால்பந்து சங்கம் எச்சரிக்கை-

கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்கள் எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் உடனடியாக சிவப்பு அட்டை காண்பித்து அந்த வீரருக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின் பின்னர், ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு வீரரிடம் இருந்து மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மைதானங்களில் அடிக்கடி துப்பக்கூடாது. வீரர்கள் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது, முடிந்த அளவு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு வீரர் மற்றொரு வீரர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும், நடுவர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பலாம். 

அல்லது மஞ்சள் அட்டை கொடுத்து தண்டிக்கலாம் என நடுவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிகாட்டு நெறிமுறையை திருத்தம் செய்துள்ளது.

ஆனால், அடிக்கடி இருமல் மற்றும் மைதானத்தில் துப்புதல் தண்டனைக்குள்ளாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.