தொடரை வென்ற இங்கிலாந்து!! -அயர்லாந்துக்கு வெள்ளையடிப்பு-

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடர் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குரிய தகுதி சுற்றான "சூப்பர் லீக் " லாக கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில கடந்த 30 ஆம் திகதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று பகல் - இரவாக சவுத்தாம்ப்டனில் நடந்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்களை எடுத்தது. கேம்பர் அதிகபட்சமாக 68 ஓட்டம் எடுத்தார். அவர் கடந்த ஆட்டத்திலும் அரைசதம் அடித்து இருந்தார்.
அடில் ரசித் 3 விக்கெட்டும், டேவிட் வில்லே, சகீப் மக்மூத் தலா 2 விக்கெட்டும், ஜேம்ஸ் வின்ஸ், ரீஸ் டாப்ளே தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டம் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேர்ஸ்டோவ் 41 பந்தில் 82 ஓட்டங்களை விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். டேவிட் வில்லே 47 ஓட்டங்களும், சாம் பில்லிங்ஸ் 46 ஒட்டத்தையும் எடுத்தனர்.
லிட்டில் 3 விக்கெட்டும், கேம்பர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 3 ஆவது மற்றும் கடைசி போட்டி வருகிற 4 ஆம் திகதி நடக்கிறது.