2023 உலக கோப்பை தகுதிகாண் போட்டிகள் 30 ஆம் திகதி ஆரம்பம்!! -ஐ.சி.சி. அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
2023 உலக கோப்பை தகுதிகாண் போட்டிகள் 30 ஆம் திகதி ஆரம்பம்!! -ஐ.சி.சி. அறிவிப்பு-

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள்  வருகிற 30 ஆம் திகதி தொடங்கும் என்று ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

குறித்த தொடர் கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30 ஆம் திகதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. 

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் சவுதம்டனில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 

இந்த தொடரில் இருந்து சூப்பர் லீக் போட்டி ஆரம்பமாகிறது என்றும் எஞ்சிய போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. 

Radio