டோனி தொடர்ந்து இந்தியாவிற்காக விளையாட வேண்டும்!! -கவுதம் கம்பீர்-

ஆசிரியர் - Editor II
டோனி தொடர்ந்து இந்தியாவிற்காக விளையாட வேண்டும்!! -கவுதம் கம்பீர்-

நச்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் மேலும் தெரிவிக்கையில்:- 

வயது என்பது வெறும் நம்பர் தான். நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம். 

இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ, சிறப்பான பார்மில் இருந்தாலோ, ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம் என்றார். 

Radio