மீண்டும் களத்தில் குதிக்கும் மைக் டைசன்!!

குத்துச்சண்டைப் போட்டியில் எதிர் போட்டியாளரை நொக் அவுட் செய்து வெற்றி பெறுவதில் புகழ் பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக அமெரிக்காவின் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன், மீண்டும் களத்தில் குதிக்க போவதாக அறிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்பால் குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதுடன், போட்டியாளர்களிடையே பெரும் பரபரப்பான ஏற்படுத்தியுள்ளது.
54 வயதான மைக் டைசன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டிக்னிடி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க் மையத்தில் எட்டு சுற்றுகள் கொண்ட காட்சி போட்டியில் களமிறங்கவுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியாக போட்டியிட்ட 51 வயதான ராய் ஜோன்ஸ் ஜூனியருடன், டைசன் மோதவுள்ளார்.
மைக் டைசனின் இந்த அறிவிப்பு தற்போது, அவருடைய இரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1985ஆம் முதல் 2005ஆம் ஆண்டு வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக திகழ்ந்த மைக் டைசன், 58 தொழில்முறை போட்டிகளில் 50இல் வெற்றியை ருசித்த டைசன், 2005ஆம் ஆண்டு ஓய்வுக்கு முன்பு கெவின் மெக்பிரைட்டுடன் தோற்றுப் போனார்.
குத்துச் சண்டை உலகில் ஜாம்பவானாக திகழும் மைக் டைசன், 20 வயதில் ஹெவிவெயிட் சம்பியனார் என்பது குறிப்பிடத்தக்கது.