இந்தியா தென் ஆப்ரிக்கா 3-வது டி20 போட்டி- கேப்டவுன் நகரில்
இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒரு நாள் தொடரை 5 க்கு 1 என கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்ற நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது போட்டி, கேப்டவுன் நகரில் இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில், இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத ஜஸ்பீரித் பும்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.மேலும், முதல் இரு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய யுவேந்திர சஹாலுக்குப் பதில், மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் களம் இறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெறாத நிலையில், கடந்த போட்டியில் பங்கேற்ற அணியே களம் இறங்கும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் 5 ஆம் தேதி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை தொடங்கிய இந்திய இப்போட்டியுடன் தொடரை நிறைவு செய்கிறது