SuperTopAds

ஆர்ச்சருக்கு அபராதம்!!

ஆசிரியர் - Editor III
ஆர்ச்சருக்கு அபராதம்!!

கிரிக்கெட்டின் போட்டிகளில் பேணப்படும் உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறிய ஆர்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு விதிகளை மீறி மான்செஸ்டர் ஸ்டேடியத்திற்கு செல்லும் வழியில் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு சென்று வந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளானார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து கழற்றிவிடப்பட்ட அவரை 5 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.

இதில் அவருக்கு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டதுடன், எழுத்துபூர்வமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அபராதத்துடன் தப்பியதால் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆடுவதில் உள்ள சிக்கல் நீங்கியது.

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு ‘நெகட்டிவ்’ முடிவு வந்து விட்டால் 21 ஆம் திகதி அவரால் அணியுடன் இணைந்து கொள்ள முடியும்.