வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத் தொகுதி, கொமர்ஷல் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பி.எல். சி. அபி கட்டடம், யாழ். ஹொட்டல் பிறைவேற் லிமிற்ரெட், யாழ். மதர் கெயார் பிறைவேற் லிமிற்ரெட், பொம்மைவெளி, நாவாந்துறை, முத்தமிழ் வீதி, மீனாட்சிபுரம், பண்ணை சுற்றுவட்ட வீதி, கண்ணகி புரம், பண்ணை சுகாதாரக் கிராமம், யாழ். சிறைச்சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, யாழ். கோட்டைப் பிரதேசம், திருநெல்வேலிச் சந்தியிலிருந்து பலாலி வீதி வேம்படிச் சந்தி வரை, பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, தபால் பெட்டிச் சந்தி, கந்தர்மடம் சந்தி, இலுப்பையடிச் சந்தி, சிவன்- அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, கந்தர்மடம் அம்மன் வீதி, நாவலர் வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி அத்தியடி வரை, பலாலி வீதி பருத்தித்துறை வீதியிலிருந்து வீரமாகாளி கோவில் வரை, ஆரியகுளம் சந்தியிலிருந்து இராசாவின் தோட்டச் சந்தி வரை, கம்பஸ் லேன், திருநெல்வேலி புறப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிற்ரெட், நொதெர்ண் சென்றல் கொஸ்பிற்றல், Bright Inn, AVNOR பிறைவேற் லிமிற்ரெட், பலாலி வீதி டம்றோ காட்சியறை, IBC தமிழ், BCCAS, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் வீதிச் சந்தி வரை, மகாத்மா வீதி, முனீஸ்வரன் வீதி, கந்தப்பசேகரம் வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு