டுவிட்டர் கையாண்டுள்ள புதிய யுக்தி
வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக டுவிட்டர் வலைதளம் புதிய யுக்திகளை கையில் எடுத்துள்ளது. டுவிட்டரில் ஏற்கனவே நேரடி வீடியோக்களை ஒளிபரப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் உள்ளூர் செய்திகளையும் டுவிட்டர் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இதன்படி அவசர செய்தி களின் போது உள்ளூர் சேனல்களின் செய்திகளை நேரடியாக டுவிட்டர் ஒளிபரப்ப உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மியாமி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான செய்திகளை WSVN7 சேனல் ஒளிபரப்பியது. இதனை அப்படியே டுவிட்டர் தளமும் நேரடி யாக ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.