யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயங்களிலேயே உள ஆரோக்கியமற்ற ஆசிரியர்கள் அதிகம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயங்களிலேயே உள ஆரோக்கியமற்ற ஆசிரியர்கள் அதிகம்..!

வடமாகாணத்தில் உள ஆரோக்கியமற்ற ஆசிரியர்கள் அதிகளவில் உள்ள கல்வி வலயமாக வலிகாமம் கல்வி வலயம் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

அண்மையில் வடக்கு மாகாணத்தில் 184 ஆசிரியர்களுக்கு உள ஆரோக்கியமற்றவர்கள் என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், 

அதனடிப்படையில் ஓய்வு பெற விரும்புகிறவர்களுக்கு ஓய்வு வழங்குவதற்கும், ஓய்வு பெற விரும்பாதவர்கள் தமது உள ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், 

கல்வியமைச்சு தீர்மானித்திருந்த நிலையில்,யாழ்.கல்வி வலயம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களில்  இவ்வாறான ஆசிரியர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கல்வியமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை பிரகாரம், ஓய்வு பெற விரும்புகிறவர்களுக்கு ஓய்வும், ஓய்வு பெற விரும்பாதவர்கள்

கல்வியமைச்சினால் நியமிக்கப்படும் மருத்துவர் குழு முன்னிலையில் தமது உள ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

என கல்வியலாளர்கள் பலர் கேட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு