தொலைபேசி இலக்கங்களின் தொகையில் அதிரடி மாற்றம்….!
13 இலக்கம் கொண்ட தொலைபேசி விரைவில் அறிமுகம்
இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்கம் கொண்ட தொலைபேசி எண்களை வழங்குமாறு டெலிெகாம் துறை தெரிவித்துள்ளது.
தொலைபேசி பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதற்காக 13 இலக்க எண்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “13 இலக்க எண்கள் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து புதிய தொலைபேசிகளுக்கும் 13 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.