அரச உத்தியோகத்தர்கள் இடும் புள்ளடிகள் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்த வேண்டும்..! வரதராஜசிங்கம் (விண்ணன்) கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
அரச உத்தியோகத்தர்கள் இடும் புள்ளடிகள் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்த வேண்டும்..! வரதராஜசிங்கம் (விண்ணன்) கோரிக்கை..

வடக்கில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்குவதன் மூலம் சிறந்த ஆரம்பத்த ஏற்படுத்த முடியும் என யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரும் தொழில் அதிபருமான பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம் (விண்ணன்) கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்கள் விவேகத்துடன் முடிவு எடுப்பது காலத்தின் தேவையாக உள்ளதுவடக்கில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் 

நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சேவையை வழங்கி வருகின்றனர்இவர்களில் வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் திடமான ஓர் ஆசிரிய இடமாற்றம் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் 

பலர் உளரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கண்டு வருவதாக அறிய முடிகிறதுவடக்கு மாகாண கல்வி அமைச்சினை பொறுப்பெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவும் உயரதிகாரிகளின் அசண்டையீனத்தாலும் 

தேசிய கொள்கைகளில் ஒன்றான ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதுஇதன்காரணமாக திருமண வயதை அடைந்த ஆசிரியர்கள் பலர் 7 வருடங்கள் கடந்தும் மொழி மாவட்டங்களில் பணி புரிவதோடு திருமணம் முடித்த7 வருடங்கள் 

கடந்த பெண் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுடன் ஒன்றாக வாழ முடியாமல் பரிதவிக்கின்றனர்மேலும் கஷ்ட பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித போக்குவரத்து ஒழுங்குகளும் இல்லாத நிலையில் 

இலத்திரனியல் கையொப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் கையொப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் இதன் காரணமாக கடமையுணர்வுடன் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு பாடசாலை செல்ல முடியாததன் காரணமாக ம

ன உளைச்சலுக்கு உள்ளாவதோடு மன விரக்தியும் அடைந்துள்ளனர்மாறிவரும் உலக நடைமுறைக்கு ஏற்ற இலத்திரனியல் கையொப்பங்களை அறிமுகப்படுத்த முன்னர் சுவைகளை சேவைகளை பெறுபவர்களும் சேவையை வழங்குபவர்களும் 

இலகுவாக பயனடையக்கூடிய வகையிலான ஒழுங்கமைப்புக்களை செய்து கொடுத்திருக்க வேண்டும்ஆகவே தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளி வாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் கஷ்டங்களையும் மனவேதனைகளையும் அறியாதவர்களாக 

கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளனர்எனவே நான் இம்முறை என்னுடைய நடைமுறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் 

வடக்கு அரச சேவையை புரட்சிகரமான சேவையாக மாற்றுவதற்கு அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு