சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்..! 2 ஆண்டு கடூழிய சிறை, 50 ஆயிரம் இழப்பீ, 5 ஆயிரம் தண்டம், 10 வருடங்களின் பின் தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்..! 2 ஆண்டு கடூழிய சிறை, 50 ஆயிரம் இழப்பீ, 5 ஆயிரம் தண்டம், 10 வருடங்களின் பின் தீர்ப்பு..

சிறுமியை அடித்து துன்புறுத்திய சிறுமியின் பாதுகாவலரான 54 வயதான பெண் ஒருவருக்கு 2 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா தீர்ப்பளித்துள்ளார். 

குறித்த பெண்ணுக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார். வாகரையில் 2010 ஆம் ஆண்டு குறித்த சிறுமி துன்புறுத்தப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 

அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு