யாழ்.மாவட்டத்தில் வேட்பாளர்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்..! தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வேட்பாளர்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்..! தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு..

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்கள் வேட்பாளர்களையும், குடும்பத்தினரையும் புகைப்படம் எடுப்பது அச்சுறுத்தும் நடவடிக்கை என வேட்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இன்று மாலை தலமை வேட்பாளர்களுக்கும் யாழ்.தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர்களுக்கு நோில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளிற்கும் 

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர.களிற்கும் இடையான சந்திப்பு நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோதே மேற்படி குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வேட்பாளர்களாகிய எம்மை புகைப்படம் எடுத்து அச்சுறுத்துவதோடு தினமும்எங்கே போறாய் , 

எங்கு கூட்டம் என பெரும் நெருக்கடியினையும் ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு புலனாய்வாளர்கள் ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தும் சமயம் இராணுவத்தினரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர்.

அதாவது நாம் பயணிக்கும் சமயம் வீதிகளில் மறிக்கும் படையினர் தேர்தல் பிரசுரம் இருக்கின்றாதா , துண்டுப்பிரசுரம் கொண்டு போகின்றீர்களா என விபரம் கோருகின்றனர். தேர்தல் பணியில் அலுவலர்களும் அவர்களிற்கு உதவியாக பொலிசாருமே 

செயல்பட வேண்டிய நிலையில் படையினரின் நடவடிக்கைகள் அச்சுறுத்தலாகவுள்ளது. என சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் பதிலளித்த மாவட்டச் செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கவனத்திற்கு 

கொண்டு செல்லப்படும் எனப் பதிலளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு