யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் 10 வியாபார நிலையங்கள்..! ஒன்றுக்கும் பதிவில்லை. கச்சான் கடையையும் விட்டுவைக்காத கனவான்கள் எங்கே..?

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் 10 வியாபார நிலையங்கள்..! ஒன்றுக்கும் பதிவில்லை. கச்சான் கடையையும் விட்டுவைக்காத கனவான்கள் எங்கே..?

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உரிய பதிவுகளை பேணாத 10 வியாபார நிலையங்கள் இயங்கிவரும் நிலையில் அவை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

ஒரு வெதுப்பகம், ஒரு சுப்பர் மார்க்கெட், இரு உணவகங்கள், 6 பழக்கடைகள் என 10 வியாபாரா நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை யாழ்.மாநகரசபையில் பதியப்படாத வியாபார நிலையங்களாகும். அவற்றை பதிவு செய்யுமாறு யாழ்.மாநகரசபை

தொடர்ச்சியாக பல தடவைகள் கடிதம் எழுதியபோது வைத்தியசாலை நிர்வாகம் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, 

குறித்த வியாபார நிலையங்கள் அனைத்தும் நலன்புரி சங்கத்தின் ஊடாக நடத்தப்படுகின்றன. எனினும் அவற்றை யாழ்.மாநகரசபையில் பதிவு செய்யவேண்டும். என யாழ்.மாநகரசபை எழுத்துமூலம் கேட்டதற்கமைய உடனடியாக பதிவு செய்யுமாறு நாம் பணித்துள்ளோம் 

என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு