மகளிர் அணி செயலாளரை இடைநிறுத்தியது தமிழரசு கட்சி!

ஆசிரியர் - Admin
மகளிர் அணி செயலாளரை இடைநிறுத்தியது தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்தும், யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்குவதற்காக தமிழரசுக் கட்சிக்கு கனடாவில் இருந்த கிடைத்த 21 கோடி ரூபா தொடர்பாக எந்தக் கணக்குகளும் கட்சியில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், நிதி விடயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன், குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் தொடர்பாகவும், உரிய ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமது கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு கடித மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கமையவே, விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உள்ளிட்ட நான்கு பெண் உறுப்பினர்களையும், கட்சியில் இருந்தும், அவர்களின் பதவிகளில் இருந்தும் இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு