தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி..! கிழக்கு மரபுரிமை பாதுகாப்பு செயலணியில் தமிழ்பேசும் உறுப்பினர்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி..! கிழக்கு மரபுரிமை பாதுகாப்பு செயலணியில் தமிழ்பேசும் உறுப்பினர்கள்..

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான செயலணியில் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளாக இருவரை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி இணங்கியிருக்கின்றார். 

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் எடுத்த ஜனாதிபதி மேற்படி இணக்கத்தைத் தெரிவத்துள்ளார். 

அந்தவகையில் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நிபுணர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு