கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு 1000 கோடி ரூபாய் செலவாகும்..! சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor
நாடாளுமன்ற தேர்தலுக்கு 1000 கோடி ரூபாய் செலவாகும்..! சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை..

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 1000 கோடி ரூபாய் தேவை என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து தொிவித்திருக்கின்றார். 

தேர்தல் ஒழுங்குகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 , 15 , 16 , 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமற்போவோருக்கு 

ஜுலை 20 , 21 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குச் சீட்டுகளில் புள்ளடியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.இம்முறை பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் நாளான ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறாது. 

ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாவது தேர்தல் முடிவை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் வௌியிட முடியும். 

எனவும் ஆணைக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Radio
×