தேசியக் கொடியிலும் மாற்றம் அவசியம்! - கூட்டமைப்பு
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் தேசியக் கொடியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
தற்போதிருக்கின்ற தேசியக் கொடியானது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் ஆரம்பகால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன், அண்மையில் தேசியக் கொடியை ஏற்றுவதை தவிர்த்துக் கொண்ட விவகாரம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டார்.