SuperTopAds

கடிக்காத விஷப்பாம்பை கடித்து துப்பிய நபர்!

ஆசிரியர் - Admin
கடிக்காத விஷப்பாம்பை கடித்து துப்பிய நபர்!

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் புறநகரில் உள்ள சுக்லாபூர் பகர் கிராமத்தை சேர்ந்தவர் சோனேலால், இவர் சம்பவத்தன்று மாலை வயலில் தன்னுடைய மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு விஷப்பாம்பு வந்துள்ளது. 

அது அவரை கடித்ததாக கருதிய சோனேலால், அதனை பழிவாங்குவதற்காக அதைப் பிடித்து, அதன் தலையை கடித்து, மென்று துப்பியுள்ளார். இதையடுத்து மயக்கமடைந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரவு 7 மணிக்கு மோகாகன்ஜ் சமூகநல மையத்தில் சேர்க்கப்பட்ட அவருக்கு, இரவு 10 மணிக்கு நினைவு திரும்பியுள்ளது.

சம்பவம் குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வர்மா கூறியதாவது, “பாம்பு அவரை கடித்ததாக தெரியவில்லை. அவருடைய உடலில் பாம்பு கடித்ததற்கான எந்த அடையாளங்களும் காணப்படவில்லை ” என்று தெரிவித்தார். 

மாநில மனநல மையத்தின் செயலாளர், மருத்துவர் எஸ்சி திவாரி கூறுகையில், ‘‘அந்த நபரின் நடவடிக்கை இயல்புக்கு மாறாக உள்ளது. சாதாரண மனிதன் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டான். அவர் மிகவும் குழம்பிய மனநிலையில் காணப்பட்டார். அவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக தெரிகிறது” என்றார்.