தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தின் சென்றவர்கள் மீது பொலிஸார் கெடுபிடி..! புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது வழக்கு..

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தின் சென்றவர்கள் மீது பொலிஸார் கெடுபிடி..! புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது வழக்கு..

நெல்லியடி- மாலுசந்தி பகுதியில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற ஊடகவியலாளரின் உபகரணபை பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது வழக்கு தொடப்பட்டிருக்கின்றது. 

குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கடுமையான சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டமை தொடர்பில் செய்தி சேகரித்தமை தொடர்பில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார். 

என்ற குற்றச்சாட்டில் அந்த ஊடவியலாளர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்ட ஊடகவியலாளரான ம.மதினாவன் கருத்து தெரிவிக்கையில், மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்களின் பிரச்சார கூட்டம் தற்பேது நடைபெற்று வருகின்றது. 

அங்கு நான் செய்தி சேகரிப்பதற்கான சென்றிருந்தேன். அங்கு வழமைக்கு மாறாக அதிகரித்த சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். என்னையும் வழிமறித்து சோதனை செய்தனர். எனது உடமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர். பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளை நான் புகைப்படம் எடுத்திருந்தேன்.

இதன் போது என்னுடன் முரண்டபட்டுக் கொண்ட பொலிஸார் தமது கடமைகளுக்கு நான் இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 3 குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸார் கைக்கவசங்கள் எதனையும் அணியாத வாறே என்னையும், எனது உடமை மற்றும் பொது மக்களையும் சோதனை செய்திருந்தனர் என்றும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு