கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

திருகோணமலை 'சைக்கிள்' வேட்பாளர் 'வீட்டு'க்குள் பாய்ந்தார்!

ஆசிரியர் - Admin
திருகோணமலை 'சைக்கிள்' வேட்பாளர் 'வீட்டு'க்குள் பாய்ந்தார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும், பேரின்பவரதன் லக்மன் என்ற வேட்பாளரே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை சந்தித்த லக்மன், கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டு, திருகோணமலையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

Radio
×