அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இளைஞன் பலி!

ஆசிரியர் - Admin
அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இளைஞன் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், இன்று மாலை அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில், தோப்பூர் - அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட் அஹ்ஸான் (25 வயது) என்பவரே உயிரிழந்தார் என தெரியவருகின்றது.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்பியூலன்ஸ், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு சென்று, மீண்டும் வைத்தியசாலைக்குத் திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தோப்பூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கொண்டிருந்த மேற்படி இளைஞன் அம்பியூலன்ஸில் மோதி படுகாயமடைந்த நிலையில், மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய அம்பியூலன்ஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு