யாழ்.மாநகரசபை முதல்வரினால் செய்யப்பட்ட 6 நியமனத்தை நீக்க தீர்மானம்..! மாநகரசபையே எடுத்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை முதல்வரினால் செய்யப்பட்ட 6 நியமனத்தை நீக்க தீர்மானம்..! மாநகரசபையே எடுத்தது..

யாழ்.மாநகர முதல்வரினால் செய்யப்பட்ட 6 நியமனங்களை நீக்குமாறு யாழ்.மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

மாநகர சபையின் முதல்வர் மாநகர சபை நடவடிக்கைகள் மற்றும் வேலைப்பளு என்பவற்றை இலகுவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆளணியினர் 6 பேரும் 

தற்போது அவர்கள் தமது கடமைகளை சரிவர மேற் கொள்வதில்லை எனவும் பாராளுமன்ற தற்போது வேட்பாளராக போட்டியிடும் ஆனோல்ட்டிற்காக 

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதாக சபையில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் சபை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 

வாக்கெடுப்பில் நியமனங்களை நீக்குமாறு 17 பேரும் அதற்கு எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் 

இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுதமிழ் தேசிய மக்கள் முன்னணி குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு