மக்கள் திடமாக இருக்கிறார்கள்..! தேர்தலில் கடும்போட்டி இருக்கும் என நினைத்தோம், அப்படி இல்லை என மக்களே உணர்த்துகின்றனர்..

ஆசிரியர் - Editor I
மக்கள் திடமாக இருக்கிறார்கள்..! தேர்தலில் கடும்போட்டி இருக்கும் என நினைத்தோம், அப்படி இல்லை என மக்களே உணர்த்துகின்றனர்..

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு நிகரான மாற்று கட்சி இல்லாமையாலும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு நீண்டகாலம் ஆதரவளித்தமையாலும் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள். அது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் மீதும், அவர்களுடைய கருத்துக்கள் மீதும் விமர்சனங்கள் மக்களுக்கு இருந்தாலும் அவர்களுடைய வாக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே. என்பதை பல இடங்களில் மக்களே எமக்கு கூறியிருக்கின்றார்கள். 

மேற்கண்டவாறு புளொட் அமைப் பின் தலைவரும், வேட்பாளருமான த.சித்தார்த்தன் கூறியுள்ளார், மக்கள் மத்தியில் கூட்டமைப்பில் உள்ள சிலர் மீதும், அவர்களுடைய கருத்துக்கள் மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும் தாம் 

நீண்ட காலம் ஆதரித்தமையாலும், கூட்டமைப்புக்கு நிகரான மாற்று இல்லாமையாலும் கூட்டமைப்புக்கே ஆதரவளிக்கவேண்டிய நிலையில் இருக் கிறோம். என்பதை பல இடங்களில் மக்கள் கூறினார்கள் எனவும் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று 

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்பேதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வேட்புமனு தாக்கல் செய்யும்போதும் கூட 

நாடாளுமன்ற தேர்தல் போட்டி மிக்கதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மக்களுடன் பேச தொடங்கியதன் பின்னர் அவ்வாறான போட்டி எதுவும் இல்லை. என்பதை என்னால் உணர்ந்துகொள்ள கூடியதாக இருந்தது. 

கூட்டமைப்பில் உள்ள சிலர் மீதும், அவர்களுடைய கருத்துக்கள் மீதும் மக்களுக்கு விமர்சனம் உள்ளது. ஆனால் கூட்டமைப்பை வெறுக்கும் அளவுக்கு அது இல்லை. பல இடங்களில் அவர்கள் அவ்வாறு பேசியிருக்க கூடாது என மக்கள் கூறினார்கள். 

மேலும் கூட்டமைப்புக்கு நிகரான மாற்று ஒன்று இல்லாமை, நீண்டகாலம் கூட்டமைப்பை ஆதரித்தமை போன்ற காரணங்களால் கூட்டமைப்பு க்கே தங்கள் வாக்களிக்கும் நிர்ப்பந்தம் உள்ளதாகவும் பல இடங்களில் மக்கள் சொன்னார்கள். 

ஆகவே வடகிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப் பே அதிகூடிய அசனங்களை பெற்றுக் கொள்ளும். இதர கட்சிகள் எதாவது ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனம் பெறலாம். 

இதன்போது கூட்டமைப்பு கடந்தமுறை கூறியதைபே இப்போதும் கூறுகிறது, ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. என மக்கள் குற்றஞ்சாட்டுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்தமுறை ஒன்றையும் புதிதாக கூறவில்லை. 70 வருடங்களாக தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், விடுதலை ப்போராட்ட இயக்கங்கள், தமிழீழ விடுதலை புலிகள் கூறியதையே கூட்டமைப்பு இப்போதும் கூறுகிறது. 

அதாவது தமிழ் மக்களுடைய அரசிய ல் உரிமை பிரச்சினை, அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள். இதில் பிரச்சினை என்னவென்றால் 70 வருடங்களாக கூறியது அல்லது கேட்டது ஒன்றும் நடக்கவில்லை, கிடைக்கவில்லை. 

ஆகவே கூட்டமைப் பு புதிதாக ஒன்றையும் கூறவில்லை. 70 வருடங்களாக இதைதான் தமிழ் தலைவர்கள் கேட்கிறார்கள். மேலும் ஒன்றும் நடக்கவில்லை என்றில் லை. 2015ம் ஆண்டுக்கு முன்னர் கிட்டத்தட்ட 600 அரசியல் கைதிகள் இருந்தார்கள். 

இன்று 100 அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தவகையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் வெளியில் தொியாவிட்டாலும் தமிழ்தேசி ய கூட்டமைப்பே மூல காரணம். வலிகாமம் வடக்கிலே 4 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு காரணம் தமிழ்தேசிய கூட்டமை ப்பு வழங்கிய இடையறாத அழுத்தம். மேலும் 2017ம், 2018ம் ஆண்டுகளில் 7 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி யாழ்.மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் 

கிராமங்களில் பல வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கின்ற ன. இதற்கும் காரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பு. அரசியல் தீர்வு விடயத்தில் கூட செவ்வனே ஒரு முயற்சி நடந்தது. நாங் அங்கம் வகித்த குழு விலே என்னால் வழங்கப்பட்ட அறிக்கையை வாசித்தவர்கள் 

நான் ஒரு பயங்கரவாதி என்றார்கள். அந்தளவுக்கு ஆக்கபூர்வமான விடயத்தை கொடுத்தேன். மேலும் நான் அரசியலமைப்பு பேரவையில் உப குழு ஒன்றில் இருந்தபோதே சொன் னேன். இது முடிவுக்கு வரப்போவதில்லை என, அதற்கு காரணம் 

சிங்கள தலைவர்கள் இதுவரையில் நியாயமான தீர்வை நோக்கி நகர்வதற்கு தயாராக இல்லை. ஆகவே நாம் தொடர்ந்து நகர்வதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை மக்கள் தொிவு செய்யவேண்டும். இப்போது நாங்கள் பல கட்சியாக நின்று பயனில்லை. 

பிறேமதாஸ காலத்தில் சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்தியபோது அவர் சொன்ன விட யம் சிறுபான்மை கட்சிகள் உட்கார்ந்து பேசி உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் சொல்லுங்கள் என. அவ்வாறான நிலை இருக்க கூடாது. 

ஆகவே மக்கள் கூட்டமைப்பை ஆதரிப்பதுதான் சிறந்த தீர்மானமாக இருக்கும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு