நயினை நாகபூஷணி அம்மனுக்கு அவமரியாதை! - பாதணிகளுடன் படையினர்.

ஆசிரியர் - Admin
நயினை நாகபூஷணி அம்மனுக்கு அவமரியாதை! - பாதணிகளுடன் படையினர்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது, ஆலயத்துக்குள் பொலிஸார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் கடமையில்ஈடுபட்டு புனிதத்தை கெடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனோ காரணமாக நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் மட்டுமே ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அம்மனின் கொடியேற்ற நிகழ்வை நேரில் காண வந்திருந்த பலரும் ஆலய வெளி வீதியில் அமைந்துள்ள வாயில் கதவுகளை பூட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்தினுள் பொலிஸாரும் கடற்படையினரும் காலணிகளுடன் கடமையில் இருந்தமை தொடர்பில் பலரும் நேரில் அவர்களுக்கு அறிவுறுத்திய போதிலும் அதற்கு அவர்கள் செவி கொடுக்காது கடமையில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு