யாழ்.மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 48 பேர் காயம், 2 பேர் பலி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 48 பேர் காயம், 2 பேர் பலி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீதி விபத்துக்களில் 43 பேர் காயமடைந்துள்ளதுடன், 2 பேர் உயிரிழந்துள்ளனர். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது தொடர்பாக பணிப்பாளர் வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம் கடந்த ஒருவாரத்தில் வீதி விபத்துக்களில் 43 பேர் காயமடைந்துள்ளனர், 2 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 68 பேர் ஏனை விபத்துக்களால் காயமடைந்துள்ளனர். 

இதேபோல் கடந்த 5 மாதங்களில் யாழ்.மாவட்டத்தில் 212 பேர் வீதி விபத்துக்களிலும், 118 பேர் ஏனை விபத்துக்களிலும் காயமடைந்துள்ளதுடன், 3 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு