யாழ்.நகரில் வாகனங்களை நிறுத்துவோர், வாகனங்களில் பொருள்களை வைத்துவிட்டு செல்வோர் அவதானம்..! நேற்றும் இரு திருடர்கள் மாட்டினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வாகனங்களை நிறுத்துவோர், வாகனங்களில் பொருள்களை வைத்துவிட்டு செல்வோர் அவதானம்..! நேற்றும் இரு திருடர்கள் மாட்டினர்..

யாழ்.நகரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து கைதொலைபேசிகளை திருடிய இருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

யாழ்.காங்கேசன்துறை வீதியில் சத்திரத்துச் சந்திக்கு அருகில் பெண்கள் பயணிக்கும் மோட்டார் சைக்கிளின் திறப்பை எடுக்க மறந்து வர்த்தக நிலையத்திற்கு சென்ற பெண் 

உடனடியாக திரும்பிய சமயம் அவரது மோட்டார் சைக்கிளிள் வைத்திருந்த கைத் தொலைபேசியை களவாடிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றவரை குறித்த பெண் அவதானித்ததுடன், 

வீதியில் சென்றவர்களை உதவிக்கு அழைத்த நிலையில் குறித்த திருடன் மடக்கி பிடிக்கப்பட்டு தொலைபேசி மீட்கப்பட்டது, இதன்போது திருடனிடம் இருந்த மற்றொரு தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. 

அந்த அழைப்பை எடுத்த பொதுமக்கள் திருடியதற்காக பிடித்துவைத்திருப்பதை கூறியுள்ளனர். இதனையடுத்து  திருடனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர் நோில் வந்துள்ளார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரும் ஒரு திருடன் என தொியவந்ததுடன், இலங்கை மின்சாரசபைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து தொலைபேசியை 

திருடிக் கொண்டே அவர் அங்கு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கவனித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு