கண்ணீரால் நிறைந்த கிளிநொச்சி.. சர்வதேசமே நீதியை தா!

ஆசிரியர் - Editor I
கண்ணீரால் நிறைந்த கிளிநொச்சி.. சர்வதேசமே நீதியை தா!


காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எப்போது விடுதலையாவார்கள்? அவர்கள் உயிருடன் இல்லை என்றால் எதற்காக கொல்லப் பட்டார்கள்? எப்படி கொன்றீர்கள்?  இந்த கேள்விகளுக்கு எங்களுக்கு பதில்கள் வேண்டும். அந்த பதிலை இலங்கையின் ஆட்சியாளர்கள் வழங்க மறுக்கிறார்கள். என கண்ணீருடன் கூறும் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், 


எமக்கிருக்கும் கடைசி நம்பிக்கை சர்வதேசம் மட்டுமே. சர்வதேசம்  இந்த கேள்விகளுக்கான பதிலை எமக்கு பெற்றுக் கொடுக்கவேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி பேதங்களை கடந்து எங்களுக்காக ஒத்துழைப்பு வழங்கவே ண்டும். எங்களுக்காக பேசவேண்டும். எனவும் உருக்கமான கோரிக்கையினை முன்வைத்தனர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களுடைய உண்மை நிலையை வெளிப்படு த்தக்கோரி கிளிநெர்சசி- கந்தசுவாமி ஆலயம் முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களினால் தொ டங்கப்பட்ட போராட்டம்  இன்று 366 நாளை தொட்டிருக்கிறது. 


இந்நிலையில் காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்களுடைய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள்  இணைந்து  இன்று காலை கிளிநொச்சி நக ரில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த போராட்டத்தின்போதே மேற்படி கேள்விகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்வைத்துள்ளார்கள். 


இதன்போது போராட்டத்தை தலமைதாங்கி நடத்திவரும் திருமதி கலாறஞ்சினி ஊடகங்களுக்கு

கண்ணீர்மல்க தங்கள் நிலைப்பாட்டை கூறுகையில், 366 நாட்கள் வீதியில் கிடந்து எங்கள் உ றவுகளுக்கு, எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்களை என்ன செய்தீர்கள்? எனக் கேட்டு போராடி வருகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் எந்த பதிலையும் வழங்கவில்லை. நாட்டின் ஜனாதிபதி கையை விரிக்கிறார். எங்களுடைய கேள்வி  இவை தான். 


எங்கள் உறவினர்கள்  இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எப்போது விடுதலையா வார்கள்? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? இல்லை என்றால் என்ன ஆனா ர்கள்? கொல்லப்பட்டார்களா? எதற்காக கொல்லப்பட்டார்கள்? எப்படி கொன்றீர்கள்?  இந்த கே ள்விகளுக்கு எங்களுக்கு பதில் வேண்டும். இந்த கேள்விகளுக்கு ஆட்சியாளர்களிடம் பதில்க

ள் இல்லை. இது எம்மை மேலும் வேதனைப்படுத்துகிறது. 


மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால்  இலங்கைக்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த 2 வ ருடங்களுக்குள் நம்பிக்கை தரும் வகையில்  இலங்கை ஒன்றையும் செய்யவில்லை.  இவ்வாறான நிலையில் சர்வதேசம் எமக்கான நீதியை பெற்று கொடுக்கவேண்டும். எமது கேள்விகளுக்கு பதில் வழங்கப்படவேண்டும். 


மேலும் கட்சி பேதங்களை கடந்து சகல கட்சிகளும் எமக்கு ஒத் துழைப்பு வழங்கவேண்டும். எமக்காக பேசவேண்டும். எனவும் அவர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு