தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள் - முன்னணியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நல்லூர் இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அத்தோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.