கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம். த.தே.கூ உட்பட பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு.

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம். த.தே.கூ உட்பட பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்ப ட்டுவரும் போராட்டம் நாளையுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்யும் நிலையில், போராட்டத்தை நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடையடைப்பு செய்து தமக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டு ள்ளனர். இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  ஆதரவினை தெரிவித்துள்ளனர். 


2009ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வினர்கள் கடந்த 2017ம் ஆண்டு 2ம் மாதம் 20ம் திகதி தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தகோரி தொடர் ச்சியான போராட்டத்தினை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் ஆரம்பித்தார்கள். இந்த போராட்டம் ஆரம் பிக்கப்பட்டு நாளை 20ம் திகதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. 


இந்நிலையில் தமது போராட்டத்திற்கான நியாயம் கிடைக்கவில்லை. என கூறியிருக்கும் போராட்டகாரர்கள் தமது கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் வலு சேர்ப்பதற்காக நாளைய தினம் வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு தருமாறு கேட்டிருக்கின்றனர். இதற்கு கிளிநொச்சி வர்த்தக சங்கம் இன்று மாலை தமது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளது. 


இதேபோல் பல் வேறு அமைப்புக்கள் அவர்களுக்கான ஆதரவினை வழங்க முன்வந்துள்ளார்கள். இதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா இன்று காலை ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நீண்ட காலாமாக முன்னெடுத்து வருகின்றனர். 


அந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமாகின்ற நிலை

யில் ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றனர். அவர்களுடைய போராட்டத்திற்கு நாம் எமது முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். காணாமல் போனோரது உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நாங்களும் இது குறித்து பேசியிருக்கின்றோம். ஆனால் ஐனாதிபதி காணாமல் போனோர் எவருமே இல்லை என்று கூறியிருக்கின்றார். 


ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளதாது வெறுமனே இல்லை. எனக் கூறாமல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளோம். இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அத் தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக 1400 மில்லியன் ருபாவம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


எனவே விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட்டு காணாமல் போனோருக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும். கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற இச் சம்பவங்களுக்கு  இந்த அரசும் பொறுப்புக் கூற வேண்டும். எவ்வாறு காணாமல் போனோர்கள், இரானுவத்திடம் ஒப்படைத்தவர்கள் எங்கே. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு