தந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்..! கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..

ஆசிரியர் - Editor I
தந்தையின் மரணத்தில் அரசியல் செய்யவேண்டாம் என அவருக்கு சொல்லுங்கள்..! கடுப்பானாராம் ஜனாதிபதி, நுவரெலியாவில் ஊரடங்கு பின்னணியும் இதுவே..

ஆறுமுகன் தொண்டமானின் மகன் தனது தந்தையின் மரணத்தை வைத்து அரசியல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அந்த நடவடிக்கையினை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டிருக்கின்றார். 

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் மகன் வாகனத்தில் ஏறி நின்று செல்லும் புகைப்படங்களை சில சுகாதார வைத்திய அதிகாரிகள் ஜனாதிபதிக்கு காண்பித்திருக்கின்றனர். இதனையடுத்து அதிருப்தியடைந்த ஜனாதிபதி இந்த செயற்பாட்டை நிறுத்துமாறு பணித்துள்ளதுடன், 

ஊரடங்கு சட்டத்தை அமுலு்படுத்துமாறு தனது செயலக அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார். கொழும்பில் இருந்து அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், 

அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் பின்னர், நிலைமையை அவதானித்த ஜனாதிபதி, கோபம் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஜனாதிபதி செயலகத் 

தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அனைத்திற்கும் முன்னதாக மக்கள் நலனே தனக்கு முக்கியமானது என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஆறுமுகம் தொண்டனின் மரண ஊர்வலங்களின் போது அவரின் மகன் ஜீவன் தொண்டமான் 

பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் செயற்படுவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு