சீனாவில் மீண்டும் கொரோனா பீதி!! -புதிதாக 23 பேர் அடையாளம்: அறிகுறிகள் இல்லையாம்-
சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை அங்கு மீண்டும் கொரோனா பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்தபோதிலும் அவ்வப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில், எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.
அறிகுறிகளுடன் 2 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. இருவருமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.