குப்பை அள்ளும் வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல்: - அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியர் - Admin
குப்பை அள்ளும் வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல்: - அதிர்ச்சி சம்பவம்

ராமேஸ்வரத்தில் நேற்று தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த வடமாநிலப் பெண் யாத்திரீகரின் உடலைக் குப்பை அள்ளும் டிராக்டரில் எடுத்துச் சென்ற அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


   

குழந்தையைப் பறிகொடுத்த தந்தையின் வேதனைக் குரல் இந்துக்களின் புனித தலமாகப் போற்றப்படுவது ராமேஸ்வரம். இங்கு நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதிலுமிருந்து நாள்தோறும் ஆயிரகணக்கான இந்துக்கள் யாத்திரை வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் யாத்திரீகர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதற்காக மத்திய- மாநில அரசுகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் பக்தர்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு டிரஸ்டுகளும் இயங்கி வருகின்றன. இவ்வாறு செயல்படும் டிரஸ்டுகளுக்கு அரசு வரிச்சலுகையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் வரும் யாத்திரீகர்கள், மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் விபத்திலோ, வேறு வகையிலோ உயிரிழந்தால் அவர்களது உடலை உடற்கூறு ஆய்வுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்து செல்லும் அவலம் அரங்கேறிவருகிறது.

நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் அருகே நடந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமாமணி (57) என்பவர் மீது தனியாருக்கு சொந்தமான தண்ணீர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரமாமணியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் எடுத்துச் சென்றது அப்பகுதியில் கூடியிருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியது. 

புண்ணியஸ்தலம், பாரம்பர்ய நகரம், யாத்திரை தலம், அம்ரூத் சிட்டி என விதவிதமாகப் பெயர் வைத்து ஒவ்வொரு பெயரிலும் ஆண்டுக்கு ஆண்டு பல நூறு கோடி ரூபாய் அரசு ஒதுக்கி வரும் நிலையில், விபத்தில் உயிரிழக்கும் உடலை எடுத்துச் செல்வதற்குகூட ஒரு வாகனம் இல்லாத நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி இயங்கிவருகிறது. 

அரசு நிர்வாகம்தான் இப்படி இருக்கிறது என்றால் பக்தர்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இயங்கி வரும் வெளிமாநில டிரஸ்டுகளும் பக்தர்களின் நலனுக்காகத் துளிகூட நன்மை செய்ய முன் வராத நிலையில் வணிக நிறுவனங்களைப்போல் இயங்கி வருகின்றன. 

இனி வரும் காலங்களிலாவது மனித உயிரின் மாண்பை அறியாமல் குப்பை வாகனத்தில் எடுத்துச் செல்லும் அவலமான போக்கைக் கைவிட வேண்டும் எனவும், இது போன்ற நேரங்களில் பயன்படுத்துவதற்கு எனப் பிரத்யக வாகனத்தையும் ஏற்படுத்த முன் வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு