நடத்தையில் சந்தேகப்பட்டதால் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்!

ஆசிரியர் - Admin
நடத்தையில் சந்தேகப்பட்டதால் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ளது வெய்க்காலிபட்டி கிராமம். இங்குள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சாத்தாக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பமானார்.


   

இதையடுத்து கடந்த 7.12.2017 அன்று லட்சுமிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்யா என்று பெயரிட்டனர். ஆனால் சாத்தாக்குட்டி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்று 2½ மாத குழந்தையான ஆர்யா வீட்டில் பின்புறம் உள்ள தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் டிரம்மில் பிணமாக மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லெட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து யாரோ மர்ம நபர்கள் தனது வீட்டிற்குள் புகுந்து குழந்தையை டிரம்மில் அமுக்கி கொலை செய்து விட்டதாக லட்சுமி தெரிவித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். 

இதுகுறித்து கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர்உசேன், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கும் போது லட்சுமி அங்கிருந்து நைசாக வெளியேறி வெய்க்காலிபட்டி கிராம நிர்வாக அலுவலர் அருணாசலத்திடம் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு கிராம நிர்வாக தகவல் தெரிவித்தார். போலீசார் லட்சுமியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் லட்சுமி தனது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதன் விபரம் வருமாறு:- எனக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்ததும் குடும்பத்திற்கு ஆகாது என அக்கம் பக்கத்தினர் என்னிடம் கூறினர். அதே போல் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு வந்தது. மேலும் குழந்தை ஆர்யாவுக்கு இருதயத்தில் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி குழந்தையால் மருத்துவ செலவு வந்தது. மேலும் எனது கணவர் சாத்தாக்குட்டியும் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் எங்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையிலும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். கணவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் தகராறு செய்வதாலும், குழந்தையால் மருத்துவ செலவு அதிகரித்து வந்ததாலும் மனமுடைந்த நான் பச்சிளம் குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். இதையடுத்து குழந்தை ஆர்யாவை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் நிரப்பிய டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு பின்னர் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடி பொதுமக்களிடம் எனது குழந்தை யாரோ தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விட்டார்கள் என கூறினேன். இதற்கிடையே போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து என்னை தேடினர். இதையறிந்த நான் போலீஸ் விசாரணைக்கு பயந்து கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு