SuperTopAds

பெண்களுக்கு பயிற்சி வழங்கினானா பயங்கரவாதி சஹரான்..? சற்று முன்னர் வீடொன்று முற்றுகை, மீண்டும் சல்லடை போடப்படும் காத்தான்குடி..

ஆசிரியர் - Editor I
பெண்களுக்கு பயிற்சி வழங்கினானா பயங்கரவாதி சஹரான்..? சற்று முன்னர் வீடொன்று முற்றுகை, மீண்டும் சல்லடை போடப்படும் காத்தான்குடி..

பயங்கரவாதி சஹரான் ஹாசீம் பெண் தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் வீடு ஒன்றை அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு சோதனையிட்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதியில் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மெற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

கடற்கரையை அண்டிய கிராமமான கர்பலா பகுதியில் உள்ள விடுதியொன்றே இவ்வாறு சி. ஐ. டி. மற்றும் விசேட அதிரடிப்படை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 

தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. சஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு இவ்விடுதியில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கைதான பெண்ணொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 

இந்த தேடுதல் நடத்தப்படுவதாக சி ஐ டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பிலிருந்து காத்தான்குடி சென்ற விசேட பொலிஸ் குழுவொன்றும் 

இத்தேடுதல் நடவ‍டிக்கையில ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.