போருக்கு பின் பல லட்சம் வெடிபொருட்கள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
போருக்கு பின் பல லட்சம் வெடிபொருட்கள் மீட்பு...

கிளிநொச்சி மாவட்டம் ஆணையிறவு, முகமாலை போன்ற பகுதிகளில் 71 ஆயிரத்து 215 கண்ணி வெடிகளை டாஸ் கலோறஸ்ட் ஆகிய மனித நேய கண்ணி வெடியகற்றும் நிறுவனங்கள்; அகற்றியுள்ளதாக இரு நிறுவனங்களின தும் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 


மேற்படி இரு மனிதநேய கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களும் போரின் பின்னர் வடமாகாணத்தின் 5 மாவட்டங் களிலும் மேற்கொண்ட கண்ணிவெடியகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் 95 ஆயிரத்து 216 கண்ணி வெடிகளை அகற்றி யிருக்கின்றன. 


ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நிதி பங்களிப்புடன் டாஸ் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆணையிறவு, முகமாலை பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது.


இந்த பகுதியிலிருந்து மட்டும் இதுவரை 71 ஆயிரத்து 215 கண்ணி வெடிகளை மேற்படி நிறுவனம் அகற்றியுள்ளது. மேலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடியகற்றும் செயற்றிட்டத்தினை மேற்கொ ண்டுவரும் கலோறஸ்ட் நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 23965 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. 


இவற்றுடன் வாகன எதிர்ப்பு வெடிபொருட்கள், துப்பாக்கி ரவைகள், போன்றனவும் உள்ளடங்கலாக 8 லட்சத்து 261ற்கும் மேற்பட்ட வெடி பொருட்களை வெடிக்காத நிலையில் இந்நிறுவனம் மீட்டிருக்கின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு