அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு
அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கொடுப்பனவுகள் தொடர்பாக திங்கட்கிழமை(20) தொலைபேசி ஊடாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு
வருகிறது.இச்செயற்பாடு மாவட்டத்தின் உள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் அரசாங்கம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் நேரடி வழிகாட்டலில் சமுர்த்திப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பிரகாரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.இத்திட்டமானது 20 பிரதேச செயலகங்களை ஒருங்கியைத்து ஏறத்தாழ 43 சமூர்த்திவங்கிகளின் ஊடாகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டார்.