SuperTopAds

கொரோனாவல் பாதிப்புக்கு உதவி!! -வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி-

ஆசிரியர் - Editor III
கொரோனாவல் பாதிப்புக்கு உதவி!! -வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி-

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக இந்திய பெண்கள் ஹாக்கி அணி வீரர்கள் வித்தியாசமான முறையில் நிதி திரட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலர் பரிதவிக்கிறார்கள். 

இத்தகைய ஏழைக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 18 நாட்கள் உடல் தகுதி பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை இந்திய ஆக்கி அணி வீராங்கனைகள் ஆன்லைன் மூலம் அறிவித்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்ளுக்கு அழைப்பு விடுப்பார்கள். 

அந்த சவாலை ஏற்பவர்ள் குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி இந்த ஜாலியான போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான உதய் பவுண்டேசனிடம் வழங்கப்படும்.